கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம்
ADDED : 1247 days ago
இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து நடித்திருந்த சாணிக்காயுதம் படம் கீர்த்தி சுரேஷ்க்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. என்றாலும் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் அவர் நடித்து கடந்த வாரத்தில் வெளியான வாஸி என்ற படம் வரவேற்பை பெறவில்லை. இந்தப் படத்தின் கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்த கீர்த்தி சுரேஷ், மலையாள சினிமாவில் தனக்கு ஒரு பெரிய ஹிட் படமாக அமையும் என்று இப்படத்தை தனது குடும்பத்தினர் மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார். ஆனால் அப்படம் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. என்றாலும் தற்போது தனது கைவசம் தமிழில் உதயநிதியுடன் நடித்து வரும் மாமன்னன் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் நடிக்கும் போலா சங்கர், நானியுடன் தசரா போன்ற படங்கள் இருப்பதால் இந்த படங்கள் தனக்கு கைகொடுக்கும் நம்பிக்கை வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.