மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
1163 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
1163 days ago
ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9
1163 days ago
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி, மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் 4-வது சீசனை தயாரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை அறந்தாங்கி நிஷா மற்றும் மா கா பா ஆனந்த் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர். அதேபோல் நடுவர்களாக நீயா நானா கோபிநாத் மற்றும் திவ்யதர்ஷினி ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இந்நிகழ்ச்சியின் முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சின்னத்திரை நடிகை பரீனா அவரது கணவர் ரஹ்மான் உபைத் ஆகியோர் நடனமாடுகின்றனர். அதன்பின் கமெண்ட் அடிக்கும் அறந்தாங்கி நிஷா, பரீனாவை கிண்டல் அடிக்கிறார். அதற்கு டென்ஷனாகும் பரீனா, அடியேய் என கத்தி நிஷாவின் கன்னத்தில் அடிக்கிறார். தொடர்ந்து புரோமோவின் முடிவில் இருவரும் மாறி மாறி அடித்துக்கொள்கின்றனர். ஆரம்பமே அட்டகாசமா இருக்கும் இந்நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை கட்டாயம் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. 'மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 4' ஜூலை 2 ஆம் தேதி முதல் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.
1163 days ago
1163 days ago
1163 days ago