மகளுடன் மழையில் நனைந்தபடி செம ஆட்டம் போட்ட ஸ்ரேயா
ADDED : 1242 days ago
தமிழில் ஜெயம் ரவி நடித்த மழை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. அந்த படத்தில் ஒரு பாடலில் மழையில் நனைந்தபடி தான் அவர் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரி கோர்ச்சேவ் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள், வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஸ்ரேயா தற்போது தனது மகளுடன் மழையில் நனைந்தபடி நடனமாடும் வீடியோ மற்றும் நீச்சல் குளத்தில் நீராடும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகிறது.