தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சி : பாலிவுட் அதிர்ச்சி
ADDED : 1190 days ago
லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கிர்த்தி ஷெட்டி, ஆதி நடித்துள்ள ‛தி வாரியர்' படம் ஜூலை 14ல் திரைக்கு வருகிறது. இப்பட விழாவில் பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், லிங்குசாமி, விஷால், சிவா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர். நடிகர் விஷால் பேசியதாவது : லிங்குசாமி பல துன்பங்களையும் துயரங்களையும் கடந்து வந்துள்ளார். இந்த படம் மூலம் சினிமாவில் மீண்டும் வெற்றிகரமான நபராக அவர் மறுபிரவேசம் செய்வார் என்பது உறுதி. வாரியர் திரைப்படம் எவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் என்பதையும் என்னால் தெளிவாக உணர முடிகிறது. தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சியைக் கண்டு இன்று ஒட்டுமொத்த பாலிவுட்டும் அதிர்ச்சியில் உள்ளது. இதற்கு எங்களிம் உள்ள ஒத்துழைப்பு தான் காரணம்'' என்றார்.