மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1174 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1174 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1174 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் ஆர்யன் நடித்து வந்தார். ஆர்யனும் ஜீ தமிழ் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷபானாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகிய ஆர்யன், அதன்பிறகு அவர் வேறு எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. ஆர்யன் ஏன் நடிக்கவில்லை என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகும் 'மீனாட்சி பொண்ணுங்க' என்கிற தொடரில் ஆர்யன் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். ஆர்யனின் இந்த கம்பேக்கை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
1174 days ago
1174 days ago
1174 days ago