மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1175 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1175 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1175 days ago
நடிகர் பிரதாப் போத்தன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பிரபல நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக சென்னையில் காலமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 12 படங்கள் இயக்கி உள்ளார். தேசிய விருது உள்ளிட்ட பிற விருதுகளையும் வென்றுள்ளார். மறைந்த பிரதாப் போத்தனின் உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலர் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதாப் போத்தன் இயக்கிய வெற்றி விழா படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையில் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அவர் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‛‛தீவிர இலக்கிய வாசிப்பையும் கலைப் படங்கள் மீதான தணியாத ஆர்வத்தையும் தொடர்ந்தவர் நண்பர் பிரதாப் போத்தன். விறுவிறுப்பான திரைப்படங்களை வெற்றிகரமாக இயக்குவதிலும் நிபுணர் என்பதை 'வெற்றிவிழா' காலத்தில் பார்த்திருக்கிறேன். அவருக்கு என் அஞ்சலி'' என தெரிவித்துள்ளார்.
1175 days ago
1175 days ago
1175 days ago