உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி உதவியால் நேபாளச் சிறுவனுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை

மம்முட்டி உதவியால் நேபாளச் சிறுவனுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை


நடிகர் மம்முட்டி தனது அறக்கட்டளை மூலமாகவும், தான் சார்ந்த மருத்துவக் குழுமங்கள் மூலமாகவும் பலருக்கும் இலவச மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார். குறிப்பாகச் செலவுத் தொகை அதிகமாகும் அறுவை சிகிச்சைகளைக் கூடத் தனது அறக்கட்டளை மூலமாக இலவசமாகவே செய்து கொடுக்க ஏற்பாடுகளை மம்முட்டி செய்து தருகிறார்.

அந்த வகையில், நேபாளத்தைச் சேர்ந்த டல்லோ சவுத் என்பவர் தனது 17 வயது மகன் விக்ரம் உள்ளிட்ட குடும்பத்துடன், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வேலை தேடி கேரளாவின் வயநாடு பகுதிக்குக் குடிபெயர்ந்தனர். அங்கே முன்னாள் எம்.எல்.ஏ சி.கே. சசீந்திரன் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். அந்தச் சமயத்தில் விக்ரமுக்கு இதயத்தில் பிரச்னை இருப்பது தெரியவந்தது.

சி.கே. சசீந்திரன், மம்முட்டிக்கு நெருக்கமானவர். இந்தத் தகவலை அவர் மம்முட்டியிடம் கொண்டு சென்றார். முக்கியமான பொதுநல உதவிகளுக்காக மட்டுமே சசீந்திரன் எப்போதும் தன்னைத் தேடி வருபவர் என்பதால், உடனடியாக எர்ணாகுளம் ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அச்சிறுவனுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மம்முட்டி உத்தரவிட்டார்.. அதன்படி தற்போது அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு, இதயத்தில் இருந்த பிறவிக் கோளாறான அடைப்பை மருத்துவர்கள் வெற்றிகரமாகச் சரிசெய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !