உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'எஸ்.ஐ.ஆர்' ஆர்ப்பாட்டத்தில் காதலருடன் கைதான 'ஜெயம்கொண்டான்' நடிகை

'எஸ்.ஐ.ஆர்' ஆர்ப்பாட்டத்தில் காதலருடன் கைதான 'ஜெயம்கொண்டான்' நடிகை


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்.ஐ.ஆருக்கு எதிராக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் 'காக்ரோச் ஜனதா கட்சி' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எஸ்.ஐ.ஆர் போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த வகையில் மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.

இங்கு அனுமதியை மீறி போராட்டம் நடத்த முயன்ற நடிகை லேகா வாஷிங்டன், அவரது காதலர் இம்ரான் கான் உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். போலீஸ் வாகனத்தில் இருந்தபடி அவர்கள், நாங்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்று தெரியவில்லை எனத் தங்களது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் நேரலை வீடியோவாகப் பகிர்ந்துள்ளனர். லேகா வாஷிங்டன் தமிழில் 'ஜெயம்கொண்டான், கல்யாண சமையல் சாதம்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !