உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமைச்சரிடம் பேசியது என்ன ? நடிகை கஸ்தூரி விளக்கம்

அமைச்சரிடம் பேசியது என்ன ? நடிகை கஸ்தூரி விளக்கம்


பிரதமர் மோடி இன்று (அக்.,11) பல்வேறு அரசு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார். அதில் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த நிகழ்வில் தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதில், நடிகை கஸ்தூரியும் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் வெங்கடரமணனுடன் நடிகை கஸ்தூரி தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார். இந்த வீடியோ வைரலானது. அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் அவர் பேசியது குறித்து அவரே நமது தினமலர்-க்கு விளக்கம் அளித்துள்ளார்.

கஸ்தூரி கூறியதாவது: மைலாப்பூர் எம்எல்ஏ., அமைச்சரான வெங்கடரமணனை சந்தித்தபோது, நலம் விசாரித்தோம். பின்னர், எங்கள் சந்திப்பை சில விஷமிகள் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும் பேசும் நபர்களை முட்டிக்கு முட்டி தட்டுவதற்கு முதல்வர் விஜயின் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு கட்சி வித்தியாசம் பார்க்காமல் பெண்கள் அனைவரும் விஜய் பக்கம் நிற்போம் எனக் கூறினேன். அதற்கு அவர், அப்படி பேசுபவர்களை எல்லாம் மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை என்றார். அவர் மைலாப்பூர் எம்எல்ஏ.,வாக நின்றதில் இருந்தே எனக்கு தெரியும். என் குடும்பத்தினர் அனைவரும் மைலாப்பூர் தான். அதேபோல், இன்றைய அரசு விழாவில் அமைச்சர்கள் பலரை சந்தித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !