"தமன்னா இல்லாதது தான் ஒரே குறை" ; 'ஜெயிலர் 2' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தமாஷ்
ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் வெளியான 'ஜெயிலர்' படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 'ஜெயிலர் 2' என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வரும் அக்டோபர் 15ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கிய நட்சத்திரங்களுடன் சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன் உள்ளிட்ட இன்னும் பல புதிய நட்சத்திரங்கள் இந்த இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். அதேசமயம் முதல் பாகத்தில் படத்தின் ஆரம்பகட்ட விளம்பரத்திற்கும், பின்னர் படத்திற்கும் தனது பாடலின் மூலம் ஆடிப் பலம் சேர்த்தவர் நடிகை தமன்னா. ஆனால் இந்த இரண்டாவது பாகத்தில் அவர் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், தற்போது தனிப்பட்ட முறையில் படக்குழுவினர் நடத்திய விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டபோது, ஜெயிலர் 2 படத்தில் விடுபட்ட ஒரே அம்சம் தமன்னா தான்; படத்தில் இல்லாத ஒரே ஒரு குறை அதுதான் என்று கூறியுள்ளார். மேலும், இந்தப் படத்தில் தமன்னாவை ஒரு பாடலுக்கு நடிக்க வைக்குமாறு நெல்சனிடம் தான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமே என்னால் அந்தப் பாடலை வைக்க முடியாது சார் என நெல்சன் மறுத்துவிட்டதாகவும் வெளிப்படையாகப் பேசி கலகலப்பூட்டினார் ரஜினிகாந்த்.