மேலும் செய்திகள்
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
1142 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
1142 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
1142 days ago
'வலிமை' படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் .. இவர்களுடன் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது.
இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தபோது அஜித் திடீரென ஐரோப்பாவிற்கு வெளிநாடு சுற்றுலா பயணம் சென்றார். அங்கு பல இடங்களில் பைக்கில் அவர் சுற்றிய படங்கள் வைரலாகின. அவர் இல்லாமலேயே சமீபத்தில் மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இன்று அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது .
1142 days ago
1142 days ago
1142 days ago