கதை நாயகனாக பாரதிராஜா நடித்த படம் செப்., 25ம் தேதி ரிலீஸ்
ADDED : 1 hours ago
சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா கதை நாயகராக நடித்துள்ள படம் 'புலவர்'. இதில் அவர் மெய்யாண்டவர் என்ற ஓய்வு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். தன்னுடன் பணியாற்றிய மற்றொரு கான்ஸ்டபிளுக்கு ஒரு கொலை வழக்கை கண்டுபிடிப்பதற்கு உதவுகிற மாதிரியான கேரக்டர்.
இதனை முருகையா என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சூப்பர் டாக்கீஸ் மற்றும் ஒயிட் நைட்ஸ் நிறுவனங்கள் சார்பில் சபீர் பாரத், காசி விஸ்நாதன் இணைந்து தயாரித்துள்ளனர். அஜ்மல் கான் இசை அமைத்துள்ளார். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் வருகிற செப்., 25ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.