உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கேரக்டர் பெயரையை தனது பெயராக வைத்துக் கொண்ட நடிகை

பிளாஷ்பேக் : கேரக்டர் பெயரையை தனது பெயராக வைத்துக் கொண்ட நடிகை

பொதுவாக தான் நடிக்கும் கேரக்டர் பெயரோ அல்லது படத்தின் பெயரோ பாப்புலர் ஆனால் அதனை தன் பெருக்கு முன்னால் வைத்துக் கொள்வார்கள். குறிப்பாக 'வெண்ணிற ஆடை' நிர்மலா, 'நிழல்கள்' ரவி என இப்படி பலரை சொல்லலாம். ஆனால் படத்தில் தான் நடித்த கேரக்டரின் பெயரையே தனது பெயராக வைத்துக் கொண்டவர் பல்லவி.

பஞ்சாபை சேர்ந்த பல்லவியின் இயற்பெயர் ராணி பத்ரா. முதலில் அவர் நடிக்க ஆரம்பித்தது ஒரு ஹிந்திப் படத்தில். ஆனால் அதற்கு முன்பே அவர் 'பிரீத்தி' என்ற பெயரில் நடித்த 'இல்லாலு பிரியராலு' என்ற தெலங்கு படம் வெளியானது. இந்த படத்தில் அவர் ஷோபன் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் . அந்தப்படம் அங்க செம ஹிட். இந்தப்படம் தமிழ்ல 'பூ பூவா பூத்திருக்கு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அடுத்து, 'நேத்ரா பல்லவி' என்ற கன்னட படத்தில் 'பல்லவி' என்ற டைட்டில் கேரக்டரில் நடித்தார். இந்த படமும், பல்லவி என்ற கேரக்டரும் பெரிய ஹிட். சென்ற இடமெல்லாம் ரசிகர்கள் அவரை பல்லவி என்றே அழைக்க அவரும் தனது பெயரை பல்லவி என்றே மாற்றிக் கொண்டார். இந்த பெயருடன்தான் தமிழில் 'அறுவடை நாள்' படத்தில் நடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !