முன்பதிவில் வேகமாக முன்னேறும் 'ராமாயணா'
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியான ஹிந்திப் படம் 'ராமாயணா'. தமிழில் டப்பிங் ஆகி வெளியாகி உள்ள இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் ரசிகர்கள் பார்ப்பதற்காக நேற்று உலகம் முழுவதும் நடைபெற்றது.
படத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் பிரமாண்டமாக இருப்பதாகவும், மிரட்டலாக இருப்பதாகவும் கருத்துக்களைப் பகிர்ந்தனர். அதையடுத்து இப்படத்திற்கான முன்பதிவு வேகமாக முன்னேறி வருகிறது. ஆன்லைன் இணையதளங்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று காலையில் இந்த முன்பதிவு நிலவரம் ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரமாக மட்டுமே இருந்தது. இன்றைய முன்பதிவு நிலவரம் அடுத்தடுத்து இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் முதல் பாகம் சுமார் 2000 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் வியாபாரம் சிறப்பாக நடந்துள்ள நிலையில் வசூலும் மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.