தீபாவளி ஸ்பெஷல்: ஓடிடியிலும் புதுபடங்கள் இருக்கு...!
நவம்பர் மாத தொடக்கத்தில் தீபாவளி பண்டிகை வருவதால் திரையரங்குகளில் பல புதியப்படங்கள் வெளியாகவுள்ளது. அதேபோல் தியேட்டரில் டிக்கெட் கிடைக்காத ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பல படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
நூறுகோடி வானவில்
இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், சித்தி இத்தானி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நூறுகோடி வானவில்'. நூறு சாமி வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் சசி இயக்கியுள்ள இந்த படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படம் நாளை நேரடியாக ஜி5 தளத்தில் வெளியாகவுள்ளது.
ஐ ஆம் கேம்
மலையாள இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' ஐ ஆம் கேம்'. நாளை முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. இது துல்கர் சல்மானின் 40வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்வாலி தீபாவளி
பாலிவுட் இயக்குநர் ரித்திஷ் மேனன் இயக்கத்தில் மிஹிர் அஹுஜா, மனோஜ் பஹ்வா, நீலு கோஹ்லி, அவுரா பட்நாகர் படோனி ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'தில்வாலி தீபாவளி'. இந்த படம் நெட்பிளிக்ஸில் இன்று வெளியாகியுள்ளது.
ஹைவான்
இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷ்ய குமார், சைப் அலிகான், போமன் இரானி, சையமி கேர், ஸ்ரியா பில்கோன்கர் மற்றும் மோகன்லால் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ' ஹைவான்'. இந்த படம் நாளை சோனி லைவ்வில் வெளியாகவுள்ளது.