உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராமாயணா' படத்திற்கு ராஜமவுலி பாராட்டு

'ராமாயணா' படத்திற்கு ராஜமவுலி பாராட்டு


இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு சரித்திர காலப் படம் என்றால் எப்படி இருக்கும் என்பதை தனது 'பாகுபலி 1, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் மூலம் காட்டியவர் தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் தந்த வெற்றி, வசூல் தான் தற்போது சில இயக்குனர்கள் இன்னும் பிரமாண்டமான சரித்திரப் படங்களை உருவாக்கக் காரணமாக அமைந்துள்ளது.

இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான 'ராமாயண காவியத்தை' மையமாக வைத்து உருவான 'ராமாயணா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்தைப் பார்த்த ராஜமவுலி படம் குறித்து தனது பாராட்டுக்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“ராமாயணா… இந்தப் படத்தின் பிரமாண்டமான அளவும், பெரிய திரையில் விரியும் காட்சிகளும் பார்ப்பதற்கு மிகவும் கண்கவர் அனுபவமாக உள்ளன.

ராமராக ரன்பீர், குறிப்பாக வனவாசம் தொடங்கும் கட்டத்திலிருந்து, அமைதியாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் இருக்கிறார். ராவணனாக யாஷ் மிரட்டலான தோற்றத்தை வெளிப்படுத்த, சீதையாக சாய் பல்லவி மிகுந்த நேர்த்தியுடன் நடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் பகுதி என அனைத்தும் மிகவும் பிடித்துப்போயின.

நிதேஷ் திவாரி மற்றும் ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துகள்! இவ்வளவு பிரமாண்டமான ஒரு கனவுத் திட்டத்தை, மிக அழகாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !