உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராமாயணா' மூலம் இழந்த இமேஜை மீட்டெடுத்த யஷ்

'ராமாயணா' மூலம் இழந்த இமேஜை மீட்டெடுத்த யஷ்


இந்தியத் திரையுலகத்தில் கன்னட சினிமாவுக்கென்ற ஒரு வரவேற்பு பல வருடங்களாக இல்லாமல் இருந்தது. அதை 'கேஜிஎப்' படங்கள் மூலம் திரும்பிப் பார்க்க வைத்ததில் அதன் இயக்குனர் பிரசாந்த் நீல் எவ்வளவு முக்கியமானவரோ அது போலவே அப்படத்தில் கதாநாயகனாக நடித்த யஷ் கூட முக்கியமானவர்தான். குறிப்பாக 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு அவருக்கு மற்ற மொழியினரும் ரசிகர்களானார்கள்.

'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு கடந்த நான்கு வருடங்களாக 'டாக்சிக்' படத்தில் அதிக கவனம் செலுத்தி வந்தார் யஷ். அந்தப் படத்திற்காக இணை தயாரிப்பாளராகவும் அவரது நிறுவனம் இருந்தது. ஆகஸ்ட் மாதம் வெளிவந்த 'டாக்சிக்' படம் படுதோல்வியை சந்தித்தது. தயாரிப்பாளராகவும் யஷ் நஷ்டமடைந்திருக்க வாய்ப்புண்டு, நடிகராகவும் அவருடைய இமேஜை இழந்தார். எப்படி அந்தப் படத்தை அவர் தேர்வு செய்து நடித்தார் என்ற கேள்வியும் எழுந்தது.

அந்தப் படம் மூலம் இழந்த தனது இமேஜை இன்று வெளியான 'ராமாயணா' படம் மூலம் மீட்டு எடுத்திருக்கிறார் யஷ். படம் பார்த்த பலரும் 'ராவணன்' கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டி வருகிறார்கள். இப்படத்திலும் யாஷ் நிறுவனம் இணை தயாரிப்பாளராக இருக்கிறது. படம் வசூலைக் குவித்தால் அவருக்கும், அவரது தயாரிப்பு நிறுவனத்திற்கும் கணிசமான தொகை லாபமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !