உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மமிதா பைஜூவின் புத்துணர்ச்சியூட்டும் நடிப்பு! - பாராட்டிய மேக்னா ராஜ்

மமிதா பைஜூவின் புத்துணர்ச்சியூட்டும் நடிப்பு! - பாராட்டிய மேக்னா ராஜ்


வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பை, வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகை மேக்னா ராஜ். அவர் கூறுகையில், ''விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதா பைஜூவின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது மிகவும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இருந்தது. ஆனால், என்னால் அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. காரணம் மமிதா அந்த பாத்திரத்திற்கு ஒரு வித்தியாசமான ஆற்றலைக் கொடுத்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை அவர் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். சமீபகாலத்தில் நான் பார்த்து ரசித்த பெண் கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று. அந்த கதாபாத்திரத்திற்கு பெரிய வரையறைகள் எதுவும் இல்லை என்றாலும், ஏனோ அது உங்களுக்குக் கண்டிப்பாக பிடித்துவிடும். அதனால் அந்த பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.

மேக்னா ராஜ் கன்னடத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கேரளா மீதான தனது அன்பை மேலும் வெளிப்படுத்தினார். பெங்களூருவா அல்லது கேரளாவா, இதில் எதை தனது முதல் வீடு என்று சொல்வது என்பதில்தான் குழப்பமடைவதாகத் தெரிவித்துள்ளார். தொழில்முறையாக மேக்னா ராஜ் என்ற அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் எனக்குக் கொடுத்தது கேரளாதான். அங்கிருக்கும் திரையுலகிலும் மக்களிடமிருந்தும் எனக்கு அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளன. இன்றளவும் எனக்குக் கேரளா மீது மிகுந்த அன்பு உண்டு என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், ரஜினியின் ஜெயிலர்-2 படத்திலும் நடித்துள்ள மேக்னா ராஜ், ரஜினியுடன் நடித்தது தனக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியதாகவும், அவரை இந்திய சினிமாவின் கடவுள் என்றும் வர்ணித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !