உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திரையில் தோன்றும் நேரத்தை விட கதாபாத்திரத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன்! - ரெஜினா கசாண்ட்ரா

திரையில் தோன்றும் நேரத்தை விட கதாபாத்திரத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன்! - ரெஜினா கசாண்ட்ரா


பல நடிகைகள் நடிக்கத் தயங்கும் வில்லி கதாபாத்திரங்களில் ரெஜினா கசாண்ட்ரா சமீபகாலமாகத் தைரியமாக நடித்து வருகிறார். குறிப்பாக, முப்பதுகளில் இருக்கும் திருமணமாகாத நடிகைகள், இதுபோன்ற கதாபாத்திரங்களை ஏற்றால் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் பறிபோய்விடும் என்ற அச்சத்தால் தயங்குவது வழக்கம். ஆனால், ரெஜினா அந்த தயக்கங்களை உடைத்து தமிழ், தெலுங்கு படங்களில் எதிர்மறை நாயகியாகத் துணிச்சலாகக் களம் இறங்கி வருகிறார்.

இது குறித்து ரெஜினா கூறுகையில், ''ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் சிக்கிக் கொள்வது எனக்குப் பிடிப்பதில்லை. நேர்மறையான கதாபாத்திரங்கள், முதன்மை கதாநாயகி, சிறப்புத் தோற்றங்கள் அல்லது வில்லி கதாபாத்திரங்கள் எனப் பலதரப்பட்ட பாத்திரங்களிலும் நடிக்கவே நான் விரும்புகிறேன். திரைக்கதையில் எனக்கு எவ்வளவு நேரம் காட்சி ஒதுக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல. அந்தப் பாத்திரத்தின் ஆழமும், முக்கியத்துவமுமே எனக்கு மிக முக்கியம்'' என்கிறார்.

மேலும், ''எனது திரைப்பயணத்தை மேலும் வலுப்படுத்துவதே தனது தற்போதைய முதன்மை இலக்கு'' என்று தெரிவித்துள்ள ரெஜினா, தமிழில் விடாமுயற்சி படத்தை அடுத்து 'மூக்குத்தி அம்மன்-2, பிளாஷ்பேக்', ஹிந்தியில் 'தி வேவ்ஸ், செக்சன் 108' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !