ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஜீவி 2
ADDED : 1166 days ago
2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜீவி'. ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய வி.ஜே.கோபிநாத் இயக்கி உள்ளார். இதில் வெற்றிக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். கருணாகரண், மைம் கோபி, ரோகினி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நேரடியாக ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளத்தில் இந்த வார புதிய திரைப்படமாக, ஹன்ஷிகா மோத்வானி, சிம்பு நடித்த, மஹா படமும் வெளியாகிறது.