கனமழை காரணமாக கேரள திரைப்பட விருது விழா தள்ளிவைப்பு
ADDED : 1211 days ago
திருவனந்தபுரத்தில் நேற்று (ஆக.3)நடைபெற இருந்த கேரள அரசின் 52வது திரைப்பட விருது வழங்கும் விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. கேரளாவில் கனமழை பெய்து வருவதால் இந்த விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வி.என்.வாசவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் எழுதியிருப்பதாவது: தொடர்ந்து பெய்து வரும் கனமழையை அடுத்து திருவனந்தபுரம் உள்பட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரைப்பட விருது வழங்கும் விழா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விழா நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.