கணவர் இழப்பிலிருந்து மீண்டு வந்த மீனா
ADDED : 1167 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் மீனா. அவருக்கும் வித்யாசாகர் என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். வித்யாசாகர் கடந்த ஜுன் மாதம் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
கணவரை குறுகிய காலத்தில் இழந்த மீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கணவர் இறந்த பிறகு சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். சமீபத்தில் அவரது சக கதாநாயகி தோழிகள் சிலரை சந்தித்த புகைப்படங்களை இன்று(ஆக.,8) பதிவிட்டுள்ளார்.
90களில் முன்னணி கதாநாயகிகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். கணவர் இழப்பிலிருந்து மீனா சற்று மீண்டுள்ளார் என அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும் போதே தெரிகிறது.