மேலும் செய்திகள்
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1124 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
1124 days ago
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் இவர் நடிப்போடு அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது சமூக பணிகளில் ஒரு பகுதியாக கர்நாட மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கும் 31 ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார்.
இந்த ஆம்புலன்ஸ்களுக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை நினைவுகூறும் விதமாக அவரின் செல்லப்பெயரை கொண்டு அப்பு எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிஷன் மருத்துவமனையில் நடந்தது.
பிரகாஷ்ராஜ் பேசியதாவது: ‛‛நூற்றாண்டுக்கும் மேலாக ஏழைகளுக்காகச் சேவை செய்து வரும் மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக நிதி திரட்டவும் தயங்க மாட்டேன். இந்த வளாகத்தில் ரத்த வங்கி ஒன்று தொடங்கவும் திட்டம் வைத்திருக்கிறேன்'' என்றார்.
1124 days ago
1124 days ago