மேலும் செய்திகள்
அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா
1124 days ago
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1124 days ago
அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் மகேஸ்வரி. அதன்பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர் தாயுமானவன், புதுக்கவிதை தொடர்களிலும் நடித்தார். அதன்பிறகு சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். சின்னத்திரையில் இருந்தும் விலகினார். ஒரு மகன் பிறந்த நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். அதன்பிறகு நடிக்கவும் வந்தார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மகேஸ்வரி அதில் தனது கணவர் வீட்டில் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: மிகுந்த எதிர்பார்ப்போடுதான் திருமணம் செய்தேன். ஆனால் கணவர் வீட்டில் நான் சந்தித்த கொடுமைகள் அதிகம். அங்கு என்னை ஒரு அடிமைபோன்று நடத்தினார்கள். நடிக்ககூடாது என்று தடை விதித்ததோடு ஏற்கெனவே நடித்தவற்றை பற்றி தவறாக பேசினார்கள். நண்பர்கள் யாரும் இருக்ககூடாது, சந்திக்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்தார்கள். நடிக்க தடை விதித்ததால்தான் தொகுப்பாளராக மட்டும் இருந்தேன்.
சீரியல்களில் நடித்தால் குடும்ப மானம் போய்விடும் என்றார்கள். அது மட்டுமின்றி எனது அம்மாவுக்கு செய்த சிறு சிறு உதவிகளை கூட செய்யக் கூடாது என்று தடுத்தார்கள். அம்மாவுக்கு உதவி கிடைக்காததால் எனது அம்மா வீட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்தார். ஆண் பிள்ளையாக இருந்தால் அப்படி விடுவார்களா? நானும் அம்மாவை கைவிட முடியாது அதனால் விவாகரத்து முடிவெடுத்தேன். விவாகரத்துக்கு பிறகு நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேன். எனது பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு மகேஸ்வரி கூறியிருக்கிறார்.
1124 days ago
1124 days ago