50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு
'கயல்' வின்சன்ட், டி.ஜே.பானு நடிக்கும் படம் 'அந்தோனி'. யாழ்ப்பாண கடல் பின்னணி, மீனவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இளையராஜா இசையமைக்க இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், சவுமி நடித்துள்ளனர். சுகிர்தன் கிறிஸ்துராஜா - ஜெனோசன் ராஜேஸ்வர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த படத்தில் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சென்னையில் நடந்தது. முன்னதாக நேற்று படக்குழுவினர் இளையராஜாவை சந்தித்துவாழ்த்து பெற்றனர்.
விழாவில் ஹீரோ வின்சென்ட் பேசுகையில், ‛‛நான் ஈழத்தமிழன் நார்வையில் வசிக்கிறேன். சினிமா ஆசையில் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்தேன். 12 ஆண்டுகளுக்குபின் இதில் நடிக்கிறேன். டி.ஜே.பானு ஹீரோயின். எங்களுக்காக அவர் 50 லட்சம் சம்பளம் பெறும் ஒரு தெலுங்கு படத்தை விட்டு யாழ்ப்பாணம் வந்தார். இளையராஜா இசையமைத்தது பெரிய பாக்கியம். இலங்கையை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். இலங்கையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் இலங்கையில் இருந்து நிறைய தமிழ் படங்கள் வரும்'' என்றார்.