கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி?
ADDED : 19 hours ago
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தெலுங்கு மொழியில் கார்த்தியின் படத்திற்கு நல்ல மார்கெட் உள்ளது. கார்த்தி நடிப்பில் சர்தார் 2, மார்ஷல் என இரு படங்கள் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. இதற்கு அடுத்த படமாக கார்த்தி தமிழ், தெலுங்கு இரு மொழி படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி, மேட் பட இயக்குனர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது முதற்கட்டமாக இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.