ரஜினி 47 : கொண்டாடிய பெங்களூர் ரசிகர்கள்
ADDED : 1141 days ago
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு வைரல் ஆனது. கே .பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படம் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசானது. ரஜினி திரையுலகுக்கு வந்து 47 ஆண்டுகள் ஆனதை அடுத்து சமீபத்தில் தமிழகத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்நிலையில் பெங்களூரில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினரும் ரஜினிக்கு பிரமாண்டமான கட்அவுட் வைத்து பட்டாசு வெடித்து அவரது 47வது திரையுலக வாழ்க்கையை கொண்டாடி உள்ளார்கள். இதுகுறித்து வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.