சிவகார்த்திகேயனின் படத்தில் இணைந்த விஜய் ஆண்டனி பட இயக்குனர்
ADDED : 1356 days ago
தமிழ், தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரின்ஸ். தமன் இசையமைக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது பிரின்ஸ் படத்தின் தமிழ் வசனங்களை எழுத விஜய் ஆண்டனி நடிப்பில் இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் இணைந்திருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் படம் காமெடி கதையில் உருவான நிலையில் இந்த படத்திலும் அதே போன்று காமெடி வசனங்களை அவர் எழுதியிருக்கிறாராம்.