உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் தனியாக வெளியானது

ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் தனியாக வெளியானது

நெல்சன் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிட்டனர். அப்போதே அதன் பின்னணியில் ஒரு தீம் ஒலித்தது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் தீம் மியூசிக் என்று அதே தீம்மை தனியாக வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே ரஜினி நடித்த பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடல் மட்டுமின்றி, படத்தில் ரஜினி தோன்றும் காட்சிகளுக்கென்று ஒரு மாஸான பின்னணி இசையையும் தயார் செய்கிறாராம். இது ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் கவரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !