சூப்பர் ஹீரோயின் ஆன அடா சர்மா
தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் நடித்தவர் அடா சர்மா. சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். 'தி கேரளா ஸ்டோரி' படம் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான இவர், இப்போது 'சூப்பர் வெள்ளி' என்ற படத்தில் சூப்பர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
'அக்ரோமாடோப்சியா' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்ணாக நடித்துள்ளார். நிறக் குருடு கதாபாத்திரத்துக்கு உலகம் கருப்பு, வெள்ளையாக மட்டுமே தெரியும். பொறுப்புகளை விட ஓய்வெடுக்கவும், தூங்கவும் விரும்பும் இந்த சூப்பர் ஹீரோயின் கதையை ராஜேஷ் பச்சானி இயக்கியுள்ளார். இதில் அடா சர்மாவுடன் விஜிலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி சந்திரசேகரன் நடிக்கிறார்கள்.
மற்ற சூப்பர் ஹீரோயின்களை போல அல்லாமல் இதில் வரும் சூப்பர் ஹீரோயின் எப்போதும் சோம்பேறித்தனமாகவும், தூங்கி கொண்டுமே இருப்பார். ஒரு வேளை சுறுசுறுப்புடன் எழுந்து புறப்பட்டால் உலகத்தை அழிக்கத்தான் செல்வார். இப்படியான ஒரு கேரக்டரில் அடா சர்மா நடிக்கிறார்.