உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா 42 : நாளை மோஷன் போஸ்டர் வெளியாகிறது

சூர்யா 42 : நாளை மோஷன் போஸ்டர் வெளியாகிறது

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கும் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சிவா இயக்கும் தனது 42வது படத்திலும் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. அவருடன் திஷா பதானி, யோகி பாபு, ஆனந்தராஜ், கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பத்து மொழிகளில் இந்த படம் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை(செப்., 9) காலை 10 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !