காட்பாதர் : நயன்தாராவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
ADDED : 1125 days ago
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தை தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. தமிழில் அவர் இயக்கிய தனி ஒருவன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தமன் இசை அமைத்துள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளது. ஏற்னகவே இந்த படத்தின் நாயகன் சிரஞ்சீவியின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானது. இப்போது இந்த படத்தில் நயன்தாரா சத்யபிரியா ஜெய் தேவ் என்ற வேடத்தில் நடித்திருப்பதாக கூறி அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். காட்பாதர் படம் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.