வெற்றி நடிக்கும் ‛இரவு'
ADDED : 1131 days ago
பக்ரீத் படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு தற்போது ‛இரவு' என்னும் படத்தை இயக்கி வருகிறார். எம்10 புரடொக்ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கும் இப்படத்தில் எட்டு தோட்டாக்கள், ஜீவி படங்களில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார். கோஸ்ட் திரில்லர் டிராமாவாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
வீடியோ கேம்ஸ் டிசைன் செய்யும் நாயகன் வாழ்வில், அவன் கற்பனையில் உருவாக்கிய பாத்திரங்கள், நேரில் வர ஆரம்பிக்கிறது. அதை தொடர்ந்து ஓர் இரவில் நடக்கும் பரபரப்பு சம்பவங்களே இந்தத் திரைப்படம். இப்படத்தில் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.