மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1091 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1091 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் திரைக்கு வந்து 100 நாட்களை கடந்து விட்டது. இந்த நிலையில் விக்ரம் படம் 100 நாட்கள் ஓடி சாதனை செய்ததை பட குழுவினர் இரண்டு நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில், விக்ரம் படத்தின் தொடக்கம் முதல் படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது மற்றும் வெற்றியை கொண்டாடிய காட்சிகள் வரை இடம்பெற்றுள்ளது. அதோடு இந்த படத்தில் கமலுடன் சூர்யாவும் நடித்திருப்பதால் சிங்கத்துடன் இன்னொரு இளம் சிங்கமும் சேர்ந்தது என்பது குறித்த வசனங்களும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், மற்ற நடிகர் நடிகைகள் தொடங்கி அனைவரை பற்றிய குறிப்புகளையும் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் குறித்த வசனங்கள் வரை இந்த இரண்டு நிமிட வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
1091 days ago
1091 days ago