டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மகனுடன் கலந்து கொண்ட ராஜமவுலி
ADDED : 1162 days ago
பாகுபலி, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர் ஆகிய பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு நடிக்க இருக்கும் படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார். ஜங்கிள் ஆக்சன் அட்வெஞ்சராக இந்த படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2023ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்க உள்ளது. ஆப்பிரிக்க நாட்டின் காடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில் தற்போது தனது மகன் கார்த்திகேயாவுடன் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார் ராஜமவுலி. தொலைநோக்கு பார்வையாளர்களில் ஒருவராக இருக்கும் ராஜமவுலி இந்த விழாவில் இந்திய சினிமா மற்றும் டோலிவுட் சினிமா பற்றி விரிவாக பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் ராஜமவுலி, அவரது மகன் கார்த்திகேயா ஆகியோரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.