உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேர்தல் முடிவுக்கு பிறகு துவங்கும் கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு!

தேர்தல் முடிவுக்கு பிறகு துவங்கும் கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு!


நடிகர் கமல்ஹாசன் அடுத்து சண்டை இயக்குனர்கள் அன்பறிவு இயக்கத்தில் அவரது 237வது படத்தில் நடிக்கவுள்ளார். இதனை ராஜ்கமல் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக உள்ளதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை மே மாதத்தில் தேர்தல் முடிவிற்கு பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் கதைக்களத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் பிரதானமாக இடம்பெறுகிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !