மூன்று வேடங்களில் லெஜண்ட் சரவணன்!
ADDED : 7 hours ago
'லெஜண்ட்' படத்திற்கு பிறகு தொழிலதிபர் அருள் சரவணன். தற்போது 'கொடி, கருடன்' போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'லீடர்' எனும் படத்தை தனது இரண்டாவது படமாக நடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே அவரின் அடுத்த படத்தையும் துரை செந்தில்குமார் தான் இயக்கவுள்ளார் என்பதை உறுதி செய்தார்.
இந்த நிலையில் லெஜண்ட் சரவணனின் மூன்றாவது படம் குறித்து கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கவுள்ளார். இந்த மாதிரியான மூன்று வேடங்கள் கதையம்சம் கொண்ட படங்களில் இது வித்தியாசமான படமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால், இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளாரா அல்லது வேறு இயக்குனர் இயக்குகிறாரா என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.