தங்க கோவிலுக்கு சென்ற ஹன்சிகா
ADDED : 1 hours ago
கடந்த 2022ம் ஆண்டு மும்பை தொழிலதிபர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தவர்கள், நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தார்கள். இந்த நிலையில் கடந்த வாரத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கியது. அப்போது சோஹைல் கதூரியாவிடத்தில் ஜீவனாம்சம் எதுவும் வாங்கவில்லை ஹன்சிகா. இந்நிலையில் விவாகரத்துக்கு பிறகு தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தங்க கோவிலுக்கு தனது தாயாருடன் சென்று வழிபாடு செய்துள்ளார் ஹன்சிகா. அதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.