உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்!

'கட்டா குஸ்தி 2' படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஷ்ணு விஷால்!


கடந்த 2022ம் ஆண்டில் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடித்து வெளியான 'கட்டா குஸ்தி' படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதே கூட்டணியில் 'கட்டா குஸ்தி 2' படம் உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், முனிஸ்காந்த் ஆகியோர் இணைந்து இந்த பாகத்திலும் நடித்துள்ளனர். வேல்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இப்படம் ஜூலை 3ம் தேதியன்று திரைக்கு வருவதை முன்னிட்டு இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தில் தனது சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை விஷ்ணு விஷால் நிறைவு செய்துள்ளார் என்பதை தயாரிப்பு நிறுவனம் வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !