உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா

ஒளிப்பதிவாளரைத் தொடர்ந்து இசையமைப்பாளருக்கும் கார் பரிசளித்த சூர்யா

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'கருப்பு'. இப்படத்திற்கு முதலில் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பின் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

அவருக்குப் பதிலாக புதிய இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2024ம் வருடம் நவம்பர் மாதம் 'பென்ஸ்' படத்திற்காக முதன் முதலில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் சாய். அதற்கடுத்து டிசம்பர் மாதம் 'கருப்பு' படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

புதிய இசையமைப்பாளர் எப்படி இசையமைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இன்று படத்தின் வெற்றிக்கு சாய் அபயங்கரின் இசையும் ஒரு காரணமாக அமைந்தது.

சில மணி நேரங்களுக்கு முன்பாக படத்தின் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு, அவரது எக்ஸ் தளத்தில் சூர்யா பரிசளித்த புதிய கார் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். தற்போது சாய் அபயங்கர் அதே மாடல் காருடன் புகைப்படத்தைப் பதிவிட்டு, “லவ் யு சூர்யா சார்” என்று நன்றி தெரிவித்துள்ளார். அடுத்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு இதே மாடல் கார் பரிசளிப்பா அல்லது இன்னும் விலை உயர்ந்த காரா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !