உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்!

தனுஷ் 55வது படத்தில் 'கருப்பு' பட நடிகர்!


நடிகர் தனுஷ், ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் தனுஷின் 55வது படம் உருவாகி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர் டேக் ஸ்டுடியோஸ் என இரு தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அப்யன்கர் இசையமைக்கிறார்.

மலையாள நடிகர் மம்முட்டி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கதாநாயகிகளாக ஸ்ரீ லீலா, சாய் பல்லவி இணைந்து நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் தமிழில் வெளிவந்த 'கருப்பு' படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிகாட்டிய மலையாள நடிகர் இந்திரன்ஸ் இப்போது தனுஷ் 55வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !