விஜய்யை தொடர்ந்து சூர்யாவை இயக்கும் வினோத்
அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கிய வினோத் அதன்பிறகு கமல் நடிப்பில் ஒரு படம் இயக்க இருந்தார். ஆனால் அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதையடுத்து தனுஷை இயக்க அவர் தயாராகி வந்தபோது, தன்னுடைய கடைசி படத்தை இயக்க அவருக்கு அழைப்பு விடுத்தார் விஜய். இதன் காரணமாக ஜனநாயகன் படத்தை இயக்கினார். ஆனால் பொங்கலுக்கு திரைக்கு வர இருந்த அந்த படம் சென்சார் போர்டு பிரச்னையில் சிக்கி தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
இந்த நிலையில், அடுத்தபடியாக தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை வினோத் இயக்குவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது சூர்யாவிடம் ஒரு கதை சொல்லி ஓ.கே செய்திருக்கிறார். தற்போது கருப்பு படத்தை அடுத்து விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்துள்ள சூர்யா அடுத்து ஜீத்து மாதவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் வினோத் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதை எஸ்.ஆர். பிரபு தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.