முன்பதிவில் 40 கோடி வசூல் கடந்த 'ஜெயிலர் 2'
ரஜினிகாந்த் நடிப்பில், அனிருத் இசையில், நெல்சன் இயக்கத்தில் நாளை மறுநாள் அக்டோபர் 15ல் வெளியாக உள்ள படம் 'ஜெயிலர் 2'. இப்படத்தின் முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது.
உலக அளவில் முன்பதிவின் மூலம் மட்டும் சுமார் 40 கோடி வசூலை இந்தப் படம் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமாகவும், வெளிநாடுகளில் 10 கோடிக்கும் அதிகமாகவும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். அதில் முதல் நாள் வசூல் தொகை மட்டுமே 20 கோடி என்பதும் தகவல்.
மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சத்தை நெருங்கியுள்ளது என்பதும் கூடுதல் தகவல். வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படம் வெளியாகவில்லை. நான்கு வாரத்தில் ஓடிடி வெளியீடு என்பதால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் இப்படத்தைத் திரையிட மறுத்துவிட்டார்கள். எட்டு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி வெளியீடு என்பதில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தினர் உறுதியாக உள்ளனர். அதன் காரணமாக 'ஜெயிலர் 2' வசூலில் கொஞ்சம் பாதிப்பு ஏற்படலாம் என்பதும் வினியோக வட்டாரங்களில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.