அடுத்தடுத்து பெரிய படங்கள்: சாய் அபங்கரின் அதிரடி வளர்ச்சி
பாடகர்கள் திப்பு, ஹரிணி மகன் இசையமைப்பாளர் மகன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். 'கட்சி சேரா, ஆச கூட, சிட்டு, கனவே, ரதிமா' ஆல்பங்கள் மூலம் பிரபலமானார். சினிமாவிற்கு வந்து சூர்யாவின், 'பல்டி, டியூட், கருப்பு, விஜய்சேதுபதியின் பத்தா ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இப்போது அட்லீ இயக்கும் ராக்கா, பென்ஸ், கார்த்தியின் மார்ஷல், தனுசின் ஓம் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது பல புது படங்களில் கமிட்டாகி வருகிறார்.
நேற்று ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கும் இசையமைப்பாளர் ஆக ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 27வது படம். இதுவரை இமான், அனிருத், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் சிவகார்த்திகேயன் படங்களுக்கு அதிகம் இசையமைத்து வந்தனர். இப்போது முதன் முறையாக சாய் அபயங்கர், சிவகார்த்திகேயன் கூட்டணி முதன் முறையாக உருவாகி உள்ளது. இளம் இசையமைப்பாளர்களில் வேகமான முன்னேறி வரும் சாய் அபயங்கருக்கு வயது 21. இசையமைப்பாளர் ஆக அவர் தொடர்வாரா? அல்லது சினிமாவில் ஹீரோவாக மாறுவாரா என்பது வருங்காலத்தில் தெரியவரும்.