தென்காசியில் தொடங்கியது ஜெய் படப்பிடிப்பு: ஹாரர் காமெடி ஜானரில் உருவாகிறது
ADDED : 14 hours ago
நடிகர் ஜெய் மற்றும் டெல்னா டேவிஸ் நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை சிவ பிரசன்னா இயக்குகிறார். ஹாரர் காமெடி பாணியில் படம் உருவாகிறது. ஏ.எம். பிரபாகரன் தயாரிக்கிறார். தென்காசியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஜப்பானில் உணவகம் நடத்தும் குழுமம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்த படத் தொடக்கவிழாவில் ஜப்பான் சென்று வந்த பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த படம் தவிர இன்னும் சில படங்களில் ஜெய் நடித்து வருகிறார். இதில் எந்த படம் முதலில் ரிலீஸ் ஆகப்போகிறது எனத் தெரியவில்லை. பல ஆண்டுகளாக ஒரு வெற்றிக்காக காத்திருக்கிறார் ஜெய்.