உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்

பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ்

ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தை இயக்கிய பிறகு லோகேஷ் கனகராஜ் தெலுங்குப் பக்கம் சென்றுவிட்டார். பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு அறிமுக வீடியோவுடன் வெளியானது.

அல்லு அர்ஜுனின் 23வது படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7வது படம் என்று குறிப்பிட்டு, இந்த வருடம் ஜனவரி 14ம் தேதி அந்த அறிவிப்பு வெளியானது. அதற்கடுத்து அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து சொல்லி கடந்த ஏப்ரல் 8ம் தேதி ஒரு பதிவு போட்டிருந்தார் லோகேஷ்.

இந்தக் கூட்டணியின் படம் பற்றி அவ்வப்போது ஏதாவது வதந்திகள் பரவும், பின்னர் அடங்கிவிடும். அது போலவே கடந்த சில நாட்களாக இந்தப் படம் டிராப் ஆகப் போகிறது என்றும், அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் கொடுத்த திரைக்கதை வடிவம் பிடிக்கவில்லை என்றும் தெலுங்கு இணையதளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.

அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று லோகேஷ், “சுவாரசியமான அப்டடேட்கள் விரைவில்,” என்று அல்லு அர்ஜுனையும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பு நிறுவனத்தையும் 'டேக்' செய்து பதிவிட்டுள்ளார். இதற்குப் பிறகாவது வதந்திகள் நிற்குமா அல்லது இடைவெளிவிட்டு மீண்டும் பரப்புவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !