மேடையில் சூரியைக் கிண்டலடிக்க நினைத்துப் பல்பு வாங்கிய தொகுப்பாளர்கள்
சமீபகாலமாக நடைபெறும் நட்சத்திர நிகழ்ச்சிகளில் சில தொகுப்பாளர்கள் மேடைக்கு வரும் பிரபலங்களிடம் கேள்விகள் கேட்கிறேன் என்று கொஞ்சம் அதிகம் உரிமை எடுத்துக்கொண்டு அவர்களைச் சங்கடப்படுத்துவது போல கேள்வி கேட்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
அப்படி சமீபத்தில் நடிகர் சூரி ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார். அந்த விழாவில் வெற்றியாளரின் பெயரை அறிவிப்பதற்காகச் சூரி மேடைக்கு அழைக்கப்பட்டார். அவர் கையில் ஒரு கார்டு கொடுக்கப்பட்டது. அதிலிருந்த பெயரைச் சூரி படிக்கத் தயாரானபோது, மேடையில் இருந்த தொகுப்பாளர்கள் அவர் அதைப் படிப்பதற்குச் சிரமப்படலாம் என்கிற விதமாக மறைமுகமாகக் கிண்டலடிப்பது போலக் கேலி செய்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சூரி, அவர்களை நோக்கி, கார்டில் எந்தப் பெயர் இருக்கிறதோ அந்தப் பெயரைத்தான் நான் கூப்பிடுவேன். உங்கள் சொந்தப் பெயரை அப்புறமாகக் கூப்பிடுகிறேன். நான் யாரைக் கூப்பிடுகிறேன் என்று அறிவித்த பிறகு உங்களுக்குத் தெரியும் என்று அழுத்தமாகக் கூறினார். சூரியின் இந்த அதிரடி பதிலைக் கேட்டுத் தொகுப்பாளர்கள் உடனடியாக மேடையிலேயே அவரிடம் மன்னிப்பு கேட்டு அந்தச் சங்கடமான சூழலை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.