உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நள்ளிரவில் கைதட்டிப் பாராட்டிய ரஜினி ; சுராஜ் வெஞ்சாரமூடு பெருமிதம்

நள்ளிரவில் கைதட்டிப் பாராட்டிய ரஜினி ; சுராஜ் வெஞ்சாரமூடு பெருமிதம்


நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம் வரும் அக்டோபர் 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்தில் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். படம் வெளியாக இருப்பதைத் தொடர்ந்து, பலரும் இந்தப் படத்தில் தாங்கள் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே 'வீரதீர சூரன்', யூத்' ஆகிய படங்களில் தனது இருவிதமான நடிப்பை வெளிப்படுத்திப் பாராட்டைப் பெற்றவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இந்த நிலையில், 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிகாந்த் தன்னை பாராட்டிய அந்த நிகழ்வு மறக்க முடியாதது என்று கூறியுள்ளார்.

ஒருநாள் நள்ளிரவு எனக்கும் ரஜினிகாந்திற்குமான காட்சிகள் படமாக்கப்பட்டன. இரவு இரண்டரை மணிக்கு ரஜினியின் காட்சிகள் முடிந்த பிறகும் கூட, அவர் அங்கிருந்து கிளம்பாமல் அடுத்து நான் நடிக்க வேண்டிய காட்சிகளைப் பார்ப்பதற்காகப் படப்பிடிப்பு தளத்திலேயே அமர்ந்திருந்தார். அந்தச் காட்சி படமாக்கி முடித்து 'கட்' சொன்னவுடன் ஒரு கைதட்டல் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தபோது ரஜினிகாந்த் கைதட்டியபடி எழுந்து என்னிடம் வந்து மிகவும் அருமையாக நடித்ததாகப் பாராட்டினார். ரஜினிகாந்த் கைதட்டுவதைப் பார்த்ததும் படப்பிடிப்பு தளத்தில் இருந்த மற்ற அனைத்துப் பணியாளர்களும் கைதட்டிப் பாராட்டினார்கள். நான் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளேன். ஆனால், இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரிடமிருந்து வந்த இந்தப் பாராட்டு எனக்கு தேசிய விருதை விடவும் ஒரு ஆஸ்கர் விருது வென்றதைப் போல இருந்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு இது என சுராஜ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !