ஆயுத பூஜை 2026 வெளியீடாக 3 தமிழ்ப் படங்கள்
2026ம் ஆண்டிற்கான ஆயுதபூஜை அடுத்த வாரம் அக்டோபர் 19ம் தேதியன்று திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள், திங்கள் ஆயுதபூஜை மற்றும் செவ்வாய் விஜயதசமி விடுமுறை நாட்கள் என நான்கு நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறையாக வரப் போகிறது.
அதனால், அக்டோபர் 15ல் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர் 2' படமும், அக்டோபர் 16ல் 'டிரோன்ஸ், டைட்டானிக்' ஆகிய படங்களும் என 3 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர் 2' படம் மிக அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இருப்பினும் சில காரணங்களால் எஞ்சியுள்ள தியேட்டர்களில் 'டிரோன்ஸ், டைட்டானிக்' படங்கள் வெளியாகும். பொதுவாக ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் வெளியாகும் போது வேறு படங்களை வெளியிடத் தயங்குவார்கள். ஆனால், இந்த வாரத்தில் இரண்டு சிறிய படங்கள் வெளியாவது ஆச்சரியமாகவே உள்ளது.
அக்டோபர் 16ல் தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங் ஆகி 'ரணபாலி' படமும் வெளியாகப் போகிறது. அந்தப் படத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. ரஜினிகாந்த் படத்துடனான போட்டியை மற்ற படங்கள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்பது படங்கள் வெளியான பின்பே தெரியும்.