உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதன்முறையாக சிவராஜ்குமாருடன் இணைந்த ரவீனா டாண்டன்

முதன்முறையாக சிவராஜ்குமாருடன் இணைந்த ரவீனா டாண்டன்


பிரபல பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், தமிழில் 'சாது', 'ஆளவந்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இந்த நிலையில், தற்போது கன்னடத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி வரும் 'ஏ பார் ஆனந்த்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூருவில் உள்ள பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுடன் படப்பிடிப்பு துவங்கியது.

பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் நிஷார் அகமது, ரவீனா டாண்டனுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். 'கோஸ்ட்' உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.ஜி. ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். இதற்கு முன்னதாக 'கே.ஜி.எப் 2' படத்தில் ரவீனா டாண்டன் முன்னாள் பிரதமர் இந்திரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !